search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் பரிசோதனை"

    • அதிகாரிகள் பள்ளத்தில் இருந்த மண் மாதிரிகளை எடுத்து காவலூர் பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    • எரிக்கல் விழுந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது நிலத்தில் கடந்த வாரம் வெடி விபத்து ஏற்பட்டது போன்ற பயங்கர சத்தம் கேட்டது.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது நிலத்தில் 5 அடி ஆழம், 2 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. அந்த பள்ளத்தில் நெருப்பு மற்றும் சாம்பல் போல் மண் காணப்பட்டது.

    மேலும் பள்ளத்தில் இருந்து அனல் பறக்கும் வெப்பம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வானில் இருந்து ஏதேனும் மர்ம பொருள் விழுந்ததா? என்று அச்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் தர்ப்பகராஜ், தாசில்தார் அனந்தகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறையினர் அந்த இடத்துக்கு வந்து பள்ளத்தை பார்வையிட்டனர்.

    அதிகாரிகள் பள்ளத்தில் இருந்த மண் மாதிரிகளை எடுத்து காவலூர் பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே வேலூர் மாவட்ட அறிவியல் மைய அறிவியல் அலுவலர் (பொறுப்பு) ரவிக்குமார் தலைமையிலான குழுவினர் அந்த இடத்துக்கு சென்றனர். பள்ளத்தில் இருந்து எரிந்த சாம்பல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்தனர்.

    வானில் இருந்து எரிகல் விழுந்ததால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம்.

    இங்கு விழுந்த எரிகல் அளவு ஒரு மீட்டர் வரை இருக்கும். இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எரிகல் விழுந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    அவர்கள் அந்த இடத்தை புகைப்படம் எடுத்தும், எரிகல் விழுந்த இடம் அருகே செல்பி எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்து பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

    இதனால் எரிக்கல் விழுந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    • 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
    • பரிசோதனைகளின் மூலம் மண்ணில் உள்ள அங்கக கரிமத்தின் அளவு, பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகள், மண்ணின் பண்புகள் உள்ளிட்டவை பிரித்து அறியப்படும்.

    கோவை பூலுவப்பட்டியில் ஈஷா அவுட்ரீச் சார்பில் அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் இன்று (16/04/24) திறக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூடத்தின் மூலம் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்கள் இலவசமாக பயனடைய உள்ளனர்.

    விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெரும் பொருட்செலவில் இந்த ஆய்வுக்கூடம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதிநவீன வசதிகள் மற்றும் கருவிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மண் பரிசோதனை ஆய்வு கூடத்தின் மூலம் விவசாயிகளின் நிலத்தில் உள்ள மண் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான பரிந்துரைகள் துல்லியமாக வழங்கப்பட உள்ளது.

    இந்த ஆய்வுக்கூடத்தில் பேரூட்ட, நுண்ணூட்ட சத்துக்கள் குறித்து அறியும் முழுமையான தானியங்கி கருவிகள், மண்ணின் அங்கக கரிம அளவை அறியும் கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஆய்வக தொழிற்நுட்ப வல்லுனர் குழுக்களோடு மிக சிறப்பான வகையில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த மண் பரிசோதனை சேவை முதற்கட்டமாக ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த தோராயமாக 10,000 விவசாய உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    இந்த சேவையை பெறும் விவசாயிகளின் நிலத்திற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் நேரடியாக செல்வார்கள். அங்கு நிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு கூடத்திற்கு அனுப்புவார்கள். பிறகு விவசாயிகளின் நிலத்தில் இருந்து பெறப்பட்ட மண், ஆய்வுக்கூடத்தில் பலகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.


    இந்த பரிசோதனைகளின் மூலம் மண்ணில் உள்ள அங்கக கரிமத்தின் அளவு, பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகள், மண்ணின் பண்புகள் உள்ளிட்டவை பிரித்து அறியப்படும். இந்த பரிசோதனையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நிபுணத்துவம் வாய்ந்த வேளாண் வல்லுநர் குழு பயிர் ஆலோசனை மற்றும் உரப் பரிந்துரைகளை வழங்கும். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு தொடர் வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    இந்த இலவச மண் பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைகள், விவசாயிகள் தங்கள் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு மற்றும் மண்ணின் அங்கக வளம் பற்றி அறிந்து கொள்ளவும், பயிர்வாரியான ஊட்டச்சத்து தேவை மற்றும் மண்ணின் தன்மை முதலியவற்றை கருத்தில் கொண்டு உர மேலாண்மை செய்திடவும், பயிரின் உற்பத்தியை அதிகரித்து இலாபத்தை பெருக்கவும், மண் வளத்தை மேம்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பெருமளவில் உதவி புரியும்.

    மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஈடுபடும் 33 "மண் காப்போம்" இருசக்கர வாகனங்களின் பயணம் ஆதியோகி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாகனங்கள் தமிழகம் மற்றும் கர்நாடகா முழுவதிலும் சென்று உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, தொலைதூர கிராமங்கள் மற்றும் பண்ணை நிலங்களுக்கு விரைவாக சென்று சேவையாற்ற முடியும். மேலும் விவசாயிகளை விரைவில் அணுகவும், புதிய சந்தைகளை திறம்பட கண்டறியவும் இந்த வாகனங்கள் உதவும் என்பதால் இது ஒரு முக்கிய முன்னெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

    • மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.
    • பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    எண்ணெய் கழிவு கலந்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க சில பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். எண்ணெய் படிந்த பகுதி மற்றும் எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட தாவரங்களை எடுத்து பரிசோதிக்க வேண்டும். மேலும் எண்ணெய் ஓடிய பகுதியில் மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.

    நிலத்தின் உள்பகுதியில் நீண்ட தூரம் எண்ணெய் ஊடுருவி இருக்கலாம் என கருதினால் நிலத்தடி நீர் சோதனையும் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் எண்ணெய் கசிவின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

    இது தவிர பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    • ஆய்வு கட்டணம் மண் ரூ.20, நீர் ரூ.20 ஆகும்.
    • 3 நாட்களுக்கு பிறகு வந்து ஆய்வின் முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூர்:

    அவினாசி வேளாண் உதவி இயக்குனர் அன்பழகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் வட்டத்தில் விவசாயிகள் தங்களது மண்ணை பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசின் உழவன் செயலியில் முன்பதிவு செய்யலாம். உழவன் செயலியில் தமிழ் மண்வளம் பகுதியில் மண்மாதிரி ஆய்வு முன்பதிவு பகுதியில், தங்களது ஆதார் எண், தொலைபேசி எண், ஓ.டி.பி. பெயர், முகவரி, நில விவரங்கள், பயிர் விவரங்கள் கொடுத்து மண் பரிசோதனை நிலையம், திருப்பூர் என பதிவு செய்து கொள்ளலாம். பிறகு மண்ணை ஆய்வகத்துக்கு எடுத்து வந்து பரிசோதனைக்கு சமர்ப்பிக்கலாம். ஆய்வு கட்டணம் மண் ரூ.20, நீர் ரூ.20 ஆகும். பரிசோதனை செய்யப்பட்ட பின் 3 நாட்களுக்கு பிறகு வந்து ஆய்வின் முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீரணம்பாளையம் கிராமத்தில் வருகிற 28-ந் தேதி நடமாடும் மண் ஆய்வு கூடம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • இம்முகாமில் பரமத்தி வட்டார கிராம விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகள் மற்றும் தண்ணீர் மாதிரிகளை கொடுத்து பயன்பெறலாம்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வீரணம்பாளையம் கிராமத்தில் வருகிற 28-ந் தேதி நடமாடும் மண் ஆய்வு கூடம் சிறப்பு முகாம் நடை பெற உள்ளது. இம்முகாமில் பரமத்தி வட்டார கிராம விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகள் மற்றும் தண்ணீர் மாதிரிகளை கொடுத்து பயன்பெறலாம்.

    மானாவாரி நிலங்களில் நீர் பற்றாக்குறை மற்றும் மண்ணின் ஊட்டச்சத்து குறைபாடுகளின் காரண மாக பயிர்களின் மகசூல் வெகுவாக குறைந்து வருகி றது. மண்ணின் பண்புகள் உரமேலாண்மை முறை களை கையாண்டு வந்தால் மண்வளத்தினை பாது காப்பதோடு, பயிர் விளைச் சலையும் அதிகரிக்கலாம். இதற்கு ஒரே வழி மண் மாதிரி எடுத்து பரிசோதனை செய்வதே ஆகும்.

    எப்படி எடுக்கலாம்?

    மாதிரி எடுக்கும் ஆழம் புல் மற்றும் புல்வெளி 2 அங்குலத்தில் 5 செ.மீ, நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சில தானியப் பயிர்கள் 6 அங்குலம் 15 செ.மீ, பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகள் 9 அங்குலம் 22 செ.மீ, நிரந்தரப்பயிர்கள் , மழைப்பயிர்கள், பழத்தோட்டப்பயிர்கள் 12, 24, 36 அங்குல ஆழங்களில் 3 மண் மாதிரிகளை எடுக்க வேண்டும். 30, 60, 90 செ.மீ ஆழங்களில் 3 மண் மாதிரி களை எடுக்க வேண்டும்.

    மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும், குறுக் கும் , நெடுக்கமாக நடந்து அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, மண்ணின் நிறம், நயம், மேலாண்மைமுறை பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல் பல பகுதி களாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தனித்தனி யாக மண்மாதிரி சேகரிக்க வேண்டும். முக்கியமாக ரசாயன உரங்கள், மக்கிய எரு மற்றும் குப்பை உரங்கள் பூஞ்சாண மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் இடப்பட்ட பகுதிகளில் மாதி ரிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வயலின் வரப்பு பகுதிகள், வாய்க் கால்கள், மரத்தடி நிழல், உரக்குழிகள், கிணற்றுப் பகுதி இவற்றிலும் மண்மாதிரி எடுக்கக்கூடாது.

    அதிகபட்சமாக 5 ஹெக்ட ருக்கு ஒரு மாதிரியும், குறைந்த பட்சம் கால் ஹெக்டேருக்கு ஒரு மாதிரி யும் தயாரிக்க வேண்டும். நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்கலாம். உர மிட்டவுடன் சேகரிக்கக்கூ டாது. குறைந் தது 3 மாதம் இடை வெளி தேவை. பயிர்கள் உள்ள நிலங்களில் மண்மாதிரி எடுக்கக்கூடாது. மண்மாதிரி எடுக்கவேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல், கற்கள் போன்ற வற்றை முறையாக வயல்மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.

    மண்வெட்டி கூடாது

    மண் மாதிரி எடுக்கும் போது ஆங்கில எழுத்து வி போல் மண்வெட்டியால் இரு புறமும் வெட்டி அவ்விடத்தில் உட்புற மண்ணை நீக்கிவிட வேண்டும். பின்பு வி யின் இருபுற மும் 15 செ.மீ அளவு கரண்டி மண்மாதிரி சேக ரிக்கவேண்டும். குறைந்த பட்சம் ஒரு ஹெக்டேரில் 10 முதல் 20 இடங்களில் மாதி ரிகள் சேகரிக்கவேண்டும். ஈரமான மண்மாதிரிகளாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்தவேண்டும். நுண்ணூட்டங்கள் அறிய வேண்டும் என்றால் எவர் சில்வர் அல்லது பிளாஸ்டிக் குப்பி மூலம் மண்மாதிரி களை எடுத்து பிளாஸ்டிக் வாளியில் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி மற்றும் இரும்புச் சட்டிகளை பயன்படுத்தக் கூடாது. சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஒரு பிளாஸ் டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு அரை கிலோ மண்மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும். மண்ணை சுத்த மான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி அதை 4 ஆக பிரித்து அரை கிலோ அளவு வரும்வரை திரும்ப திரும்ப கையாளவேண்டும்.

    மேற்கூறப்பட்ட வழி முறைகளை பின்பற்றி விவ சாயிகள் மண் மாதிரிகள் எடுத்து கொடுத்து அன்றே பரிசோதனை முடிவுகளை யும் பெற்றுப் பயனடைய கேட்டுக் கொள்ளப்படு கிறது.

    • தமிழக அரசு வேளாண்மைத் துறை மூலமாக அலுவலா்களை நியமித்துள்ளது.
    • விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் ஒன்றியக் குழு செயலாளா் எஸ்.அப்புசாமி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக தமிழக அரசு வேளாண்மைத் துறை மூலமாக அலுவலா்களை நியமித்துள்ளது.

    இந்தநிலையில் திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெருமாநல்லூா், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், மேற்குபதி, தொரவலூா் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள், பருத்தி, கடலை, நெல், மக்காச்சோளம் மற்றும் பிற பயிா்கள் வைரஸ் மற்றும் பூச்சி நோய்த் தாக்குதலால் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.ஆகவே வேளாண்மைத் துறை அலுவலா்கள் இந்தப் பகுதிகளில் மண்ணின் தரத்தை பரிசோதனை செய்து அதற்கு ஏற்றபடி பயிா்களுக்கு உரம் வழங்க ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சாகுபடி செய்த பயிர்கள் முளைத்து கருகிவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    • 5 மாதங்களாகியும் அந்நிலத்தில் புல் கூட முளைக்கவில்லை.

    திருப்பூர் :

    பல்லடம், பொங்கலூர் ஒன்றிய பகுதிகளில் காய்கறி, பயறு சாகுபடி அதிகம் நடக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், கம்பு, சோளம், மக்காச்சோள பயிர்களுக்கு விவசாயிகள் வழக்கம் போல் களைக்கொல்லி பயன்படுத்தினர். இதையடுத்து பயிர்கள் கருகிவிட்டதாகவும், அதற்கு பிறகு சாகுபடி செய்த பயிர்களும் முளைத்து கருகிவிட்டதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:- கடந்த பிப்ரவரி மாதம் மக்காச்சோளம், கம்பு, சோளப்பயிர்களுக்கு களைக்கொல்லி மருந்து அடித்தோம். அரை கிலோ மருந்து பாக்கெட் வாங்கி 104 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்திய நிலையில் ஒரு வாரத்துக்கு பின் பயிர்கள் கருகின.அதன்பின் 5 மாதங்களாகியும் அந்நிலத்தில் புல் கூட முளைக்கவில்லை. சோளம், கம்பு பயிரிட்டும் கருகிவிட்டது. இதுகுறித்து உரக்கடையில் முறையிட்டும் பயனில்லை. 10 ஏக்கரில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளோம். உரிய நிவாரணம் வழங்கி மீண்டும் மண் வளத்தை செறிவூட்டி கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    வேளாண் துறை இணை இயக்குனர்(பொறுப்பு ) சின்னசாமி கூறுகையில், பாதிக்கப்பட்ட நிலங்களில் உடனடியாக மண் பரிசோதனை செய்யப்படும். அதன் அடிப்படையில் உரக்கடை மற்றும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது. #MukkombuDam
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் 9 மதகுகள் கடந்த 22-ந்தேதி இரவு இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதையடுத்து அதன் அருகே புதிய கதவணை அமைக்க ரூ.410 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டார். மேலும் ரூ.95 லட்சம் மதிப்பில் அங்கு தற்காலிக சீரமைப்பு பணிகள் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    கொள்ளிடம் அணையில் உடைந்த மதகு பகுதியில் பாறாங்கற்கள் கொட்டப்பட்டு அடைப்பு ஏற்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து அங்கு தண்ணீர் கசிந்து வருகிறது. அதனை அடைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் கசிவு காரணமாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க முடியாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

    தற்காலிக சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், புதிய கதவணை கட்டுமானத்திற்கான ஆய்வு பணிகள் தீவிரமடைந்துள்ளன. பாலம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியில் உள்ள தண்ணீர் தேங்கிய பகுதி மற்றும் மணல் மேடு ஏற்பட்ட பகுதிகளில் சர்வே பணிகள் நடந்து வருகின்றன.

    முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை கட்டப்பட உள்ளதையொட்டி மண்ணின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்ற காட்சி.

    மேலும் மண்ணின் உறுதி தன்மையை பரிசோதனை செய்ய கொள்ளிடத்தின் 40 கண் மதகு மற்றும் 10 கண் மதகின் கீழ் பகுதியில் 100மீட்டர் தூரத்தில் 13 இடங்களில் போர்வெல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

    இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பூமியில் பாறை தென்படும் வரை ஆழம் ஏற்படுத்தி பிறகு இடையில் தென்படும் மண் தன்மைகள் ஆராயப்படும். தேவைப்பட்டால் மேலும் சில இடங்களில் மண் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும். ஆய்வு பணிகள் முடிந்தவுடன் புதிய பாலத்திற்கான திட்ட மதிப்பீடு, வரைபடம் தயாரிக்கும் பணி தொடங்கப்படும் என்றனர். #MukkombuDam
    ×